- Home
- Gallery
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சைலண்டாக கைது செய்யப்பட்ட சம்போ செந்தில்? எங்கு? எப்போது? அடுத்து சிக்கப்போவது யார்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! சைலண்டாக கைது செய்யப்பட்ட சம்போ செந்தில்? எங்கு? எப்போது? அடுத்து சிக்கப்போவது யார்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Armstrong Murder Case
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கிறஞர் அருள், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிஹரன், பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Seizing Raja
இந்நிலையில், கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் முக்கிய நபராக கருதப்படும் பல்லாவரத்தை சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திராவில் பதுங்கிருப்பதாக வெளியான தகவலின்படி, தனிப்படை போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
Rowdy Sambo Senthil
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்திலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சம்போ செந்தில் ஏற்கனவே திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை, முத்தியால்பேட்டையில், ரவுடி காக்காத்தோப்பு பாலாஜியின் கூட்டாளியான விஜயகுமார் வெட்டிக் கொலை உள்ளிட்ட 4 கொலை வழக்குகளில் தொடர்புடையர். மேலும் இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலையில் உள்ளன.
Armstrong Vs Sambo Senthil
கடந்த 15 ஆண்டுகளாக பிரபல ரவுடி சம்போ செந்தில் கைதாகாமல் உள்ளார். தலைமறைவாக இருந்து கொண்டு தமிழகத்தில் கொலை திட்டங்களை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி சென்னையில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த தொழிலை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sambo Senthil Arrest
இந்த கொலை தொடர்பாக சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் உத்தரபிரரேசம் மாநிலம் நொய்டா அவரை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் இரு தினங்களுக்கு முன்பே சம்போ செந்திலை நொய்டாவில் வைத்து கைது செய்யப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.