செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை.! தேதி குறித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்.?

By Ajmal Khan  |  First Published Jun 18, 2023, 8:25 AM IST

நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு வருகிற புதன் கிழமை (ஜூன் 21) பை பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள காவேரி மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


செந்தில் பாலாஜிக்கு இதய பகுதியில் அடைப்பு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீட்டில் வாரம் சோதனை மேற்கொண்டது. இதனையடுத்து நள்ளிரவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ செய்ததில்  மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவதமனையில் அடுத்த கட்ட சிகிச்சை அளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

அறுவை சிகிச்சை செய்ய திட்டம்

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியோடு செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த மருத்துவமனையில்  இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர்சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த சோதனையின் முடிவின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் 8 நாட்கள் விசாரணை நடத்தவும்  நீதிமன்றமும் அனுமதி அளித்தது. 

21ஆம் தேதிக்கு அறுவை சிகிச்சை

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வருகிற புதன்கிழமை அதாவது வருகிற 21 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

தட்டி தூக்கலாமா..! ஜூன் 20ல் ஆஜர், இல்லைனா.? செந்தில் பாலாஜி தம்பிக்கு அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ச்

click me!