ஜப்பான், சிங்கப்பூருக்கு பறக்க திட்டமிடும் மு.க.ஸ்டாலின்.? வெளிநாடு முதலீடுகள் ஈர்க்க திட்டம்

By Ajmal Khan  |  First Published Apr 23, 2023, 1:04 PM IST

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே மாதம் 23 ஆம் தேதி  ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் வகையில் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


உலக முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு   ஏப்ரல் மாதம் துபாய் சென்றிருந்தார். துபாயில் நடைபெற்ற உலக வர்த்தக கண்காட்சியில் தமிழக அரசின் அரங்கை திறந்து வைத்தார். இதனையடுத்து அந்த நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு  தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் துபாய் பயணத்தின் மூலமாக 6100 கோடி ரூபாய் முதலீடும்  15 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்து ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினின்  துபாய் பயணம் வெற்றிகரமாக அமைந்த நிலையில் அடுத்த கட்டமாக லண்டன் மற்றும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

Tap to resize

Latest Videos

கருணாநிதி வழி நடக்கும் ஆட்சியில் இப்படியா.? பாஜகவின் நீட்சி.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணிக்கட்சி

ஜப்பான் செல்லும் முதலமைச்சர்

 உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் உயர் அதிகாரிகள் வெளிநாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தநிலையில்  முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கவுள்ளார். மே மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாட்டிற்கு பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தில் போது வெளிநாட்டு நிறுவனங்களோடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்பந்தம் மேற்கொள்ளும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அமெரிக்காவிற்கு பறக்க திட்டமிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..! மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு.?

 

click me!