குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

Published : Jul 03, 2023, 08:36 PM IST
குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் விஜயகாந்த்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் அவர்களின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. 

மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின் பாராமுகமான நடவடிக்கைகளுமே  அந்த குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ள  நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து விசாரணை குழு அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டது. குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போட்டதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடுத்த தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவமும் அரங்கேறியது. 

அம்மா உணவகம்: ஏழை மக்கள் 3 வேலை சாப்பிடுவது உங்களுக்கு பிடிக்கலையா.? திமுகவை வெளுக்கும் இபிஎஸ்

தனியார் மருத்துவமனைக்கு செல்ல போதிய பணம் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற தவறான சிகிச்சை அளிப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய அரசு மருத்துவர்களே அலட்சியமாக செயல்படுவது எந்த வகையில் நியாயம். இது போன்ற சம்பவங்களால் அரசு மருத்துவமனைகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுகிறது.

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சூடுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 300 ஊழியர்களுக்கு குறி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!