தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல் சோர்வு அல்லது செரிமானக் கோளாறு காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை காலை டிஸ்சார்ச் செய்யப்படுவார் எனவும் மருந்துவமனை நிர்வாகம் அறிவிதுள்ளது.