தேவைதானா நடிகைகள் குத்தாட்டம் ? டெங்குவால் துடி துடிக்கும் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது....

Asianet News Tamil  
Published : Oct 13, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
தேவைதானா நடிகைகள் குத்தாட்டம் ? டெங்குவால் துடி துடிக்கும் மக்கள் வேதனையின்  உச்சத்தில் இருக்கும் போது....

சுருக்கம்

is there any need to do dance in public in selam in this dengue crisis

சேலத்தில் டெங்குவால் உயிரிழந்து தவிக்கும் நேரத்தில்....தேவையா இந்த  குத்தாட்டம்..?

செலத்தில் தற்போது தலைவிரித்து ஆடும் டெங்குவால், மக்கள்  பீதி அடைந்து மன வேதனையில் நாளுக்கு  நாள் துடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து  கடை திறப்பு, நகை கடை திறப்பு , செல் போன்  கடை திறப்பு, தீபாவளி கொண்டாட்டம் என அனைத்திற்கும்  குத்தாட்டம் போட நடிகைகளும், இன்னும் பிற பிரபலங்களும்  சேலத்திற்கு வருகை  புரிவது ....மக்களை  வேதனை  அடைய  செய்துள்ளது

நேற்று  ஹன்சிகா இன்று  தமன்னா நாளை  ஆரவ்....!

சேலத்தில்  நடக்கும்  எந்த ஒரு விழாவிற்கும் நடிகர் நடிகைகளை   அழைப்பது வாடிக்கையாக  இருந்தாலும், தற்போதைய  சூழலில்  அதாவது டெங்குவால் அதிகரித்து வரும்  உயிர் இழப்புகள் ஒரு பக்கம்  இருக்கும்  போது, அதே  சேலத்தில்  நடிகைகளை வரவழைத்து ,  அதுவும் நடுரோட்டில், போக்குவரத்து  நெரிசலையும்  தாண்டி  ஆட்டம்  போட வைக்கிறது " பணம் "

அதாவது  அந்த  அளவிற்கு  பணம்  வேலை  செய்கிறது ...இப்படி  குத்தாட்டம் போடுவது  ஒரு பக்கம்  இருக்கட்டும்.....நோயாளிகள், அலுவலகம் செல்வோர், குழந்தைகள், பொதுமக்கள்  என  யாரும்  பயணிக்க  முடியாத  அளவிற்கு  போக்குவரத்து  நெரிசல்  ஏற்படுகிறதே  என்பதை  எல்லாம்  பொருட்படுத்தாமல் தங்கள்  கடை  பெயர் பிரபலமாக வேண்டும்  என்பதற்காகவும் இப்படி  செய்வது  அடுக்குமா  என  மக்கள்  வேதனை  தெரிவித்து வருகின்றனர்.

அதாவது யார் செத்தா  நமக்கென்ன ..இதை தான் தாரக மந்திரமாக  வைத்துக்கொண்டு இது போன்ற செயல்களில்  ஈடுபட  செய்கிறார்கள் என்பது  இதிலிருந்தே  நமக்கு புரிகிறது.

ஆம்புலன்ஸ் போக வழியில்லை - நோயாளிகள் நிலை என்ன ?

ஆம்புலன்ஸ் போக கூட முடியாத  நிலை ஏற்பட்டு, மூன்று மணி  நேரமாக  உயிருக்கு  போராடி   உள்ளவர்களின்  நிலை  என்னவாகும் ?

இதற்கெல்லாம்  யார்  அனுமதி  தருவது ?

குத்தாட்டம் தேவை தானா ?

கடை பெயர் பிரபலம் ஆக இதுதான்  சரியான  தருணமா ?

மக்களின் உயிர் ... உயிர் தானே......இல்லை .......?

இது போன்ற  பல  கேள்விகளையும், மன  வேதனையையும்  வெளிப்படுத்தி  உள்ளனர்  மக்கள்

நேற்று  ஹன்சிகா இன்று  தமன்னா நாளை  ஆரவ்....!

நேற்று நடுரோட்டில் ஹன்சிகா  போட்ட  குத்தாட்டத்தை  பார்க்க ஆயிரகணக்கில் மக்கள் திரண்டு  போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது.

 இதே போன்று  இன்று  தமன்னா  பங்கேற்று  போக்குவரத்து  நெரிசலை  ஏற்படுத்தினார்.

நாளை  பிக்பாஸ்  வின்னர் ஆரவ், தீபாவளி  விழாவிற்காக  சேலம்  செல்ல  உள்ளாராம் .....இது மட்டும் என்ன  விதிவிலக்கா?...மீண்டும்  நெரிசல் தான்..... மக்கள் தான் துன்பம்  அடைவர்......

 மாறாதா  இந்த  நிலை? அதுவும் எடப்பாடியின்  சொந்த  ஊரில்  தொடர்ந்து   அரங்கேறும் இது போன்ற அவலங்களால் மக்கள்  மனதளவில்  பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளனர்.

குறிப்பு :

இது போன்ற பொது விழாவிற்கும், பிரபலங்களை  வரவழைத்து அவர்களுக்கு கட்அவுட், போஸ்டர் எது வைப்பதாக இருந்தாலும்,மத்திய கூட்டுறவு வங்கியின் மாநில தலைவரான இளங்கோவனின் அனுமதியின்றி, நடத்தமுடியாது  என்பது  குறிப்பிடத்தக்கது ( குறிப்பாக  சேலத்தை  பொறுத்தவரையில் ).

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலினையே தோற்கடித்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை ! வி.எஸ்.பாபுவை விஜய் மறந்தது ஏன்? பின்னணி!
TVK கூட்டணி, DMK ஆட்சி சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி!