
டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும், மதுபானங்களின் விலை சுமார் 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது எந்தெந்த சரக்கு என்ன விலை என்ற வில்பட்டியாலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், 3000 கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டதன் விளைவாக விற்பனை குறைந்து போன நிலையில்,மாநில அரசுக்கு வருவாய் ஈட்டும் பொருட்டு,நஷ்டத்தை ஈடுசெய்யவும் மதுபானங்களின் விலை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, மதுபானம் விலையை ரூ.12 வரை உயர்த்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.12 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.5 அதிகரிக்கபட்டுள்ளது. இதற்கு முன் புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தமிழக குடிமகன்களை சற்று அப்சட் ஆக்கியுள்ளது.
தற்போது எந்தெந்த சரக்கு என்னென்ன விலை என தமிழக அரசு விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதோ புதிய விலைப்பட்டியல்...