
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து 4 பேர் ஆந்திர மாநிலம் காளகஸ்திக்கு டூர் சென்றுள்ளனர்.
இதையடுத்து சுற்றுலாவை முடித்துவிட்டு இன்று மாலை காரில் 4 பேரும் தமிழகம் திரும்பியுள்ளனர்.
அப்போது எதிரே வந்த லாரியில் கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில், காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.