
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த கடிதத்தின் பெயரில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய முதன்மை செயலர் வில்பர்ட் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது கைரேகை பதியப்பட்டதாக மனு தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
இந்த கைரேகை சந்தேகம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலர் வில்பர்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இவரது கருத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம், வரும் 27-ம் தேதி மருத்துவர் பாலாஜி ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.