
வாகனம் ஓட்டுபவர்கள் பயணத்தின்போது இனி கட்டாயம் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
சென்னையில் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு குழு ஆய்வுக்கூட்டம் அமைச்சர் விஜய பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் இனி தங்களது ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்ககவேண்டும் என்றும் போக்குவரத்து காவலர்கள் ஆய்வு செய்யும்போது ஒரிஜினல் லைசென்சை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் சான்றிதழ் இல்லையெனில், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள் என்றும் காப்பீட்டை புதுபிக்க தவறியவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , சாலை விதிகளை மீறுபவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் எத்தரவிடப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களில் அதிக சுமை மற்றும் அதிக ஆட்களை ஏற்றுவதும் போக்குவரத்து விதிமீறல் தான் என்றும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கனரக வாகன ஓட்டிகளின் உரிமம் தற்காலிகமாக அல்லது விதிமீறலை பொறுத்து நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு என அறிவித்துள்ளது.