சென்னையில் இன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.. எப்போது தெரியுமா?

By Ramya s  |  First Published May 10, 2024, 4:29 PM IST

சர்வதேச விண்வெளி மையம் வானில் தெரியும் நேரம் பற்றிய தகவகளை நாசா வெளியிட்டுள்ளது. 


சர்வதேச விண்வெளி நிலையம் என்பது நமது கிரகத்தைச் சுற்றி வரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது நிலையான வேகம், திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கும் பரிசோதனைகள் நடத்துவதற்கும் உரிய இடமாக இது செயல்படுகிறது.

இந்த நிலையில் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இரவு 7.09 மணி முதல் சென்னையில் இருந்து வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

டிஸ்னி உலகம், மலை ரயில் என காண்போர் கண்களை கொள்ளை கொள்ளும் உதகை மலர் கண்காட்சி

28 ஆயிரம் கிலோமீட்டர் வேகம்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி ஆய்வு பூமியை 13 முறை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மையம்

சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SSLC Exam Result: தமிழ் தவிர்த்து அனைத்து பாடங்களிலும் சதம் விளாசிய மாணவிகளுக்கு குவியும் பாராட்டு

இது தவிர, அறிவியல் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர்.. பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் வானில் சுற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்க்க அனைத்து மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

click me!