சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை, காவல்துறையினர் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளில் நேற்று கைது செய்தனர். இந்த இரு வழக்குகளில் ரிமாண்ட் செய்வதற்காக சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து இன்று காலை சென்னை அழைத்துச் சென்றனர்.
பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை போலீசார் சங்கரை கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உரிய நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று காலை அழைத்துச் சென்றனர்.
மேலும் அவரது காரில் கஞ்சா இருந்த நிலையில் கோவை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மதுரவாயல் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட போலீசார் சவுக்கு சங்கர் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் உடன் மதுரவாயல் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மதுரவாயல் போலீசார் உள்ளனர்
சவுக்கு சங்கர் மீது பெண் வன்கொடுமை மற்றும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிசி பட்டி போலீஸ் நிலையம் தேனி மகிளா நீதிமன்ற உத்தரவுபடி தற்போது சோதனையானது நடைபெற்று வருகிறது
மேலும் இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாக வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?