விடுப்பில் சென்றார் உளவுத்துறை அதிகாரி - அடுத்து யார்..??

 
Published : Feb 06, 2017, 05:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
விடுப்பில் சென்றார் உளவுத்துறை அதிகாரி - அடுத்து யார்..??

சுருக்கம்

முதல்வராக சசிகலா பொறுபேற்க உள்ள நிலையில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்த நிலையில் உளவுத்துறை ஐ.ஜி யும் விடுப்பில் சென்றுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழக அரசியலில் கடந்த வாரம் பரபரப்பு மிகுந்த வாரமாகவே இருந்தது அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், ராமலிங்கம் போன்ற முக்கிய அதிகாரிகள் அரசியலில் ஏற்படும் மாற்றத்தையடுத்து தங்கள் பொறுப்பை விட்டு விலகினர்.

இந்நிலையில், உளவுத்துறை (Intelligent ) ஐ.ஜியாக இருக்கும் சத்தியமூர்த்தியும் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நெருக்கமானவர் என்று கூறப்பட்ட சத்தியமூர்த்தி தற்போது விடுப்பில் சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

காவல்துறையில் மாநில உளவு பிரிவு தலைவர் பதவி என்பது மிக முக்கியமானது. நேரடியாக முதல்வருடன் தொடர்பில் உள்ள பதவி இது. மாநிலம் முழுவதும் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து முதல்வருக்கு அறிக்கை அளிப்பது இவரது பணி.

சட்ட ஒழுங்கு டிஜிபியே, இவரிடம் சற்று இறங்கிதான் போகவேண்டும். அப்படி வலுவான பதவியில் இருந்த சத்தியமூர்த்தி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் கமிஷனால் மாற்றபட்டார்.

அடுத்து திமுக ஆட்சிதான் வரும் என்ற கணிப்பில் அவரை பந்தாடினார்கள். ஆனால், பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சத்தியமூர்த்தியை உளவுப் பிரிவு தலைவராக்கினார்.

ஆனாலும் தற்போது சசிகலா முதல்வராக பதவி ஏற்பதால் தனக்கு நம்பிக்கைக்குரிய அதிகாரியையே நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் மாற்றபடுவோம் என்பதால் சத்தியமூர்த்தி விடுப்பில் சென்றார்.

உளவுத்துறை தலைவராக அடுத்து யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் போலீஸ் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது கார்டன் வட்டாரத்துக்கு நெருக்கமான அதிகாரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையராக பதவி வகிக்கும்

தாமரை கண்ணன் அல்லது அதிரடிக்கு பேர் போன சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இருவரில் ஒருவர் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் நுண்ணறிவு பிரிவு தலைவர் தாமரை கண்ணனுக்கே வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!