
ரிச்சர்ட் பீலே :
ஜெயலலிதாவை தான் பார்க்கும்போது சுயநினைவுடனேயே இருந்தார் என, தற்போது சென்னைக்கு வந்து பரபரப்பாக பேட்டியளித்தார் அவருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே.
செப் 22ஆம் தேதி நீர்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கபட்டார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. அதோடு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை .இந்நிலையில், அவரது திடீர் மரணம் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்கம் கூற லண்டனிலிருந்து விரைந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, சில கேள்விகளுக்கு பதில் பதில் தரவில்ல..
கேள்விக்கு பதில் அளிக்காத ரிச்சர்ட் பீலே:
அனைத்து கேள்விக்கும் பதில் அளித்த ரிச்சர்ட் பீலே, ஜெயலிதா சிகிச்சையில் உள்ள போது ஒரு புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு மட்டும் பதிலே தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இதற்கு மட்டும் டாக்டர் ரிச்சர்ட் பீலே , பதில் அளிக்கவில்லை என தற்போது அனைவரிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது.