இனி இதுமாதிரி பண்ணாதீங்க! ரீல்ஸ் மோகத்தில் வசமாக சிக்கிய இளைஞர்கள்! வீடியோவில் கதறல்!

Published : Jun 15, 2025, 09:02 AM IST
salem

சுருக்கம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், ஏற்காடு மலைப்பாதையில் ஆபத்தான வீலிங் செய்து ரீல்ஸ் பதிவிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Instagram Reels: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் என்பது சமூக ஊடகத்தில் குறுகிய வீடியோக்கள் மூலம் பயனர்கள் தங்கள் படைப்பாற்றல், பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கைத் தருணங்களைப் பகிர்ந்து, பரவலான கவனத்தைப் பெறும் ஒரு பிரபலமான போக்கைக் குறிக்கிறது. 2020 ஆகஸ்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது உலகளவில் 50+ நாடுகளில் பயனர்களை ஈர்த்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், ரீல்ஸ் மோகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்

ரீல்ஸ் மூலம் நடனம், நகைச்சுவை, சமையல், சாகசம் போன்ற பல்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், இதன் மோகம் சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் இன்ஸ்டா பிரபலமான ஷகிலா பானு, ஓடும் ரயிலில் படிக்கட்டில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டார். இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டியிருந்தார்.

ஆபத்தான வீலிங் செய்து சாகசம்

இந்நிலையில் சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை வாசஸ்தலத்தில் கடந்த வாரம் கோடை விழா மலர்கண்காட்சி நடந்தது. இதற்காக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மலைப்பாதை சாலையில் அங்குமிங்கும் டூவீலரை ஓட்டி, மற்ற வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்தனர். ஆபத்தான வீலிங் சாகசத்தை வீடியோவாக எடுத்த அவர்கள், மலைப்பாதை சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையை தூக்கி வீசுவது போன்ற வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இளைஞர்கள் 5 பேர் கைது

இந்த வீடியோ வைரலான நிலையில் ஏற்காடு காவல்துறையினர் நெடுஞ்சாலை துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இச்செயலில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ், சிவா, பிரவீன், கார்த்திக், அரவிந்த் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விலை உயர்ந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, இளைஞர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு 5 பேரையும் எச்சரித்து காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர்.

இளைஞர்கள் வீடியோவில் கதறல்

மேலும் இந்த இளைஞர்கள் தற்போது காவல் நிலையத்திலிருந்து வீடியோ மூலம் ஒரு உறுதிமொழியையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த வீடியோவில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தை இயக்குவதோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதோ சட்டப்படி குற்றமாகும் என அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி