ஒட்டு மொத்த தமிழக காவலர்களுக்கே பெருமை சேர்த்த தலைமை காவலர் புருஷோத்தமன்..!

By manimegalai aFirst Published Sep 22, 2018, 8:04 PM IST
Highlights

சென்னை பொக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று காவல் துறைக்கு பெருமை சேர்ந்து உள்ளார்.

சென்னை பொக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று காவல் துறைக்கு பெருமை சேர்ந்து உள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள புருஷோத்தமன, கோடம்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த வாரம், நடைப்பெற்ற ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்டு  மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றார்.

அடையாறு போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இவர்,கடந்த 9 ஆம் தேதி, ஸ்பென்சர் பிளாசாவில் நடந்த தமிழ்நாடு ஆணழகன் பிரிசில், 80 கிலோ பிரிவில் கலந்துக்கொண்டு, தங்கம் பெற்றார். இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் இவர்.  2000 ஆம் ஆண்டு, அதாவது  காவல் துறையில் சேர்வதற்கு முன்பே மிஸ்டர் சென்னை, மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 - 2008 வரை மிஸ்டர் சென்னை, மிஸ்டர் தமிழ்நாடு என  அனைத்திலும் கலந்துக்கொண்டு தங்கம் தட்டி சென்று உள்ளார்.

 

மேலும், இது வரை எட்டுமுறை தங்கம் வென்று உள்ளார். காவல் துறையில் இருந்து ஆணழகன் போட்டிக்கு சென்று மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் பட்டதை பெற்றது இதுவே முதல்முறை. மேலும் வரும் காலத்தில் தேசிய அளவிலான பாடிபில்டர் போட்டியிலும் கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஆதரவு இருந்தால் கண்டிப்பாக தங்கம் வென்று வருவேன் என அவர் தெரிவித்து உள்ளார்.
 
தமிழ்நாட்டில் காவல் துறையில், பாடி பில்டர் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும், மற்ற மாநிலம்  போலவே பாடி பில்டிங் காவல் துறையில் கொண்டு வர வேண்டும்..அப்போது தான் தமிழ்நாடு காவலர்கள் அவர்களுக்கான சிறந்த தகுதியை வெளிப்படுத்த முடியும் என தெரிவித்து உள்ளார்.

புருஷோத்தமனுக்கு தற்போது காவலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.தனது பிசியான வேலை நேரத்திலும் , தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறார் புருஷோத்தமன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!