தமிழ்நாட்டை மீண்டும் கைப்பற்றுகிறதா திமுக? இலை, தாமரை மலருமா? கருத்துக்கணிப்பு முடிவு சொல்வது என்ன?

By Raghupati RFirst Published Jun 1, 2024, 6:55 PM IST
Highlights

இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தென் மாநிலத்தின் 39 மக்களவைத் தொகுதிகளில் ஆளும் திமுக 20-22 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6-8 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிய முடிய பல இடங்களில் நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. அந்த முடிவுகளை ஜூன் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தான் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தது.

ஏழு கட்ட மக்களவைத் தேர்தல், ஆறு வாரங்களுக்கும் மேலாக நீடித்து, இன்று மாலையுடன் முடிவடைந்தது. ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் வெற்றி பெறப்போவது எந்த கட்சி என்ற தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் 2024, தமிழகத்தின்  39 மக்களவைத் தொகுதிகளில் ஆளும் திமுக 20-22 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது.

Latest Videos

கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6-8 இடங்களை கைப்பற்றும். ஆனால், தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக, 1 முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால், சிரிக்க வேண்டிய விஷயம் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு, 

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவு:

திமுக 26-30
அதிமுக 6-8
பாஜக 1-3.

நியூஸ் 18 கருத்துக்கணிப்பு முடிவு:

திமுக 36-39
அதிமுக 2 
பாஜக 1-3.

டிவி 9 கருத்துக்கணிப்பு முடிவு:

திமுக 35 
அதிமுக 0 
பாஜக 4.

ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவு:

திமுக 37-39
அதிமுக 0 
பாஜக 2 .

ஜன் கீ பாத் எக்ஸிட் போல் 2024: விண்ணை முட்டும் ஆதரவுடன் வெல்லும் பாஜக! மீண்டும் மோடி ஆட்சி!

click me!