கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் மனித - மிருக மோதல் பிரச்சனையை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் மனு அளிக்கப்பட்டது.
கோவை வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த யானைகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்வதால் பல நேரங்களில் மனித – மிருக மோதல்கள் என்பது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டத்தில் இந்த பிரச்சனையை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் மனு அளிக்கப்பட்டது.
அதில் “ மனித – மிருக மோதல் குறித்து அரசு கவனம் செலுத்த் 2006 முதல் 2018 வரையிலான 13 ஆண்டு காலக்கட்டத்தில் கோவையில் அதிக எண்ணிக்கையிலான மனித – மிருகம் மோதல் நடந்துள்ளதாக ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறிப்பாக 2018-ம் ஆண்டுக்கு பிறகு மனித – மிருக மோதல் நிகழ்வுகள் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த் ஆண்டு மட்டும் 5 நிகழ்வுகள் நடந்துள்ளதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12 ஆண்டுகளில் கோவை வனச்சரகத்தில் உள்ள 85 கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் யானை தாக்குதல்கள் காரணமாக 147 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளதாக வனத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை மற்றும் போளுவாம் பட்டியில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் வாழை மற்றும் தென்னை மரங்களை குறிவைத்து யானைகள் உள்ளே நுழைகின்றன. 2022-ம் ஆண்டில் மட்டும் வனத்துறை ரூ.1.44 கோடி இழப்பீடு வழங்கி உள்ளது. ஆனால் அந்த ஆண்டு மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டிருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைகிறது என்றும், 400 மனிதர்களும், 100 இந்தியர்களும் இறப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. விவசாயிகளின் ஆண்டு வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு யானைகளால் ஏற்படும் பாதிப்பு சமமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை விட யானைகளால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.
தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செங்கல் திருட்டு; இருவர் கைது, லாரிகள் பறிமுதல்
எனவே இதுபோன்ற மோதல்களை தடுக்க யானைகளின் இருப்பிடம் போன்ற விவரங்களை தெரிந்து வைத்திருப்பது, உள்ளூர் மக்கள் மற்றும் அரசு மற்றும் வன ஆர்வலர்கள் இடையே ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடப்பது, யானைகள் ஊருக்குள் நுழைவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது, இழப்பீடு மற்றும் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் முதன்மை குழு, விரைவு குழு போன்ற குழுக்களை அமைத்து போன்ற நடவடிக்கைகளை பரிசீலிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.