
செய்யது பீடி குழும நிறுவனங்களின் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்ட செய்யது பீடி நிறுவனத்துக்கு நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 40 அலுவலகங்கள், ஆலைகள், கொடோன்கள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு செய்யது பீடி குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் உள்ள செய்யது பீடி கம்பெனியின் உரிமையாளர் யூசுபின் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களிலும், பீடித் தொழிற்சாலையிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்
இதே போன்று சென்னை சேப்பாக்கம், பட்டினபாக்கம், திருவல்லிக்கேணி,திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலும் 300 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.