திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை தன் வசம் வைத்துள்ளவர் எ.வ வேலு. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் அவரின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
சென்னை, திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாளை வரை இந்த சோதனை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னதாக கடந்த மாதம் 22-ம் தேதி திருவண்னாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது முதலமைச்சர், எ.வ. வேலுவின் விருந்தினர் மாளிகையில் தான் 2 நாட்கள் முகாமிட்டிருந்தார். அப்போது முக்கிய ஆலோசனை நடந்ததாகவும், இதன் எதிரொலியாகவே தற்போது வருமான வரி சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2024 தேர்தலை குறிச்சு வச்சுக்கோங்க.. திமுக வாக்குச்சாவடி கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்
பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள் அப்பாசாமி ரியல் எஸ்டேட், காசாகிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கணக்கில் வராத பணம், நகை, ஆவனங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.