திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நாகா மக்களை நாயக்கறி தின்பவர்கள் என்று கூறிய பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி, நாகா மக்களை "நாய்க்கறி உண்பவர்கள்" என்று கூறி அவமதித்துவிட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து ஆளுநர் மாளிகையான ராஜ்பவனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதில், "நாகர்கள் துணிச்சலானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியம் மிக்கவர்கள். திமுகவின் மூத்த தலைவர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களை 'நாய்க்கறி உண்பவர்கள்' என்று பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் நாகா சமூகத்தைப் புண்படுத்த வேண்டாம் என்று பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்" என ஆளுநர் கூறியிருக்கிறார்.
10வது படித்திருந்தால் போதும்... MBC பிரிவினருக்கு சென்னையிலேயே அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
ஆளுநரின் பதிலுடன் சேர்த்து, ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோவையும் ராஜ்பவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, தனது கருத்தை 'ஓர் உதாரணம் மட்டுமே' என்று கூறிவிட்டு, தனது கருத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்றும் எடுத்துக் கூறுகிறார்.
நாய்க்கறி உண்ணும் நாகா மக்கள் சுரணையுடன் ரவியை துரத்தி, அந்த மாநிலத்தை விட்டு ஓட வைத்தபோது, உப்பு போட்டு சோறு உண்ணும் தமிழ் மக்களுக்கு எவ்வளவு சுரணை இருக்கும் என்று ஆளுநர் ரவி மறந்துவிடக்கூடாது என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். நாகாலாந்தில் இருந்து ரவி துரத்தப்பட்டதை வடகிழக்கு மாநில மக்கள் தீபாவளிப் பண்டிகையைப் போல கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யான பாரதி, தி.மு.க.,வின் அமைப்பு செயலாளராகவும் உள்ளார்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் மதுரையில் பாரம்பரிய காய்கறி திருவிழா; 2000 விவசாயிகள் பங்கேற்பு