
கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது.
மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சுந்தராபுரம், சாய்பாபா காலனி, நீலம்பூரில் உள்ள ஆனந்தாஸ் குழும இனிப்பகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 4 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனந்தாஸ் உணவாக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வரி ஏய்ப்பு புகார் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !
இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!