அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு செலவின தொகை உயர்வு.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Published : May 28, 2022, 10:09 AM IST
அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு செலவின தொகை உயர்வு.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

சுருக்கம்

TN Govt : அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு செலவின தொகையை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த  கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி  2022 - 2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!