"அவங்கள முன்னாடியே கைது செய்திருந்தா இப்படி நடத்திருக்காது".. BJP பிரமுகர் கொலை வழக்கில் Inspector சஸ்பெண்ட்

By vinoth kumarFirst Published May 28, 2022, 9:22 AM IST
Highlights

பாலமுருகன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றிருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 3 ரவுடிகள் பாலசந்திரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

சென்னையில் பாஜகவின் எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்த பாலசந்திரன் (30) கொலை செய்யப்பட்ட வழக்கில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் பாலசந்தர் (30). பாஜக எஸ்சி-எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலர் பாலமுருகனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவுக்கு சென்ற பாலசந்தர் அங்கு நண்பர் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, பாலமுருகன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றிருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 3 ரவுடிகள் பாலசந்திரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

கொலையில் ஈடுபட்டதாக  பிரதீப், கலைவாணணன், ஜோதி, சஞ்சய் ஆகிய 4 பேரை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த 22ம் தேதியே பிரதீப், சஞ்சய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்யாததன் விளைவாக கடந்த 24ம் தேதி பாஜக பிரமுகர் கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த கொலை வழக்கு தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து சென்னைஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

click me!