சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு நிர்வாக ரீதியாக அவ்வப்போது மாற்றங்களைச் செய்வது வழக்கமான ஒன்று. கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்ததில் இருந்து அரசு நிர்வாகங்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் செயலாளர்களாக, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில், நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில், சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள விஜய ராணிக்கு பதிலாகக் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை செயலாளராக இருக்கும் அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் விஜய ராணி மாற்றத்துக்கான காரணத்தையோ அல்லது அவர் வேறு எங்கு மாற்றப்பட உள்ளார் என்ற விவரமோ இடம்பெறவில்லை.
2013ம் ஆண்டு ஐஏஎஸ் கேடரை சேர்ந்த விஜய ராணி சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக் காலம் கூட முடிவடையாத நிலையில், அவர் தற்போது திடீரென மாற்றப்பட்டுள்ளார்.