பிரதமர் மோடி சென்னை வருகை.. மாலை 3 மணி முதல் 8 மணி வரை இந்த சாலைக்கு தப்பி தவறிகூட வந்துடாதீங்க மக்களே.!

பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்ட இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு  உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.


பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மாலை 3 மணி முதல் 8 மணி வரை சென்னை ஈ.வே.ரா சாலையில் பயணிப்பத்தை தவிர்க்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பிரதமர் மோடி பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்ட இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு  உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. 

Latest Videos

பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் சாலை மற்றும் அதைச் சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட  வாய்ப்புள்ளது.

பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- மாநிலங்களவை தேர்தலில் கிடைக்காத வாய்ப்பு.. திமுகவிலிருந்து விலகுகிறேனா.? தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி விளக்கம்

click me!