உஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. இன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திர வெயில்.. இனியாவது குறையுமா?

Published : May 28, 2022, 10:01 AM IST
உஸ்ஸ்ஸ்.. அப்பாடா.. இன்றுடன் விடைபெறுகிறது  அக்னி நட்சத்திர வெயில்.. இனியாவது குறையுமா?

சுருக்கம்

ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில்அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக நீடித்து வந்த கத்தரி வெயில் என்கிற அக்னி நட்சத்திரம் இன்று நிறைவு பெறுகிறது. இனி வரும் நாட்களில் வெப்பம் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். 

ஆண்டு தோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில்அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால் சமீபகாலமாக கத்திரி வெயிலுக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. ஓரளவுக்கு மழை கை கொடுத்ததால் மார்ச் 15ம் தேதிக்கு மேல் தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. 

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பினர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வெளுத்தி வரும் நிலையில் இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் அக்னி நட்சத்தி ரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் விடைபெறுகிறது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெற்றாலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!