
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி விடுமுறை என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதற்கான மனுத்தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. இதுவரை 127 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
அதில் கடைசி நாளான இன்று மட்டும் 72 பேர் மனுதாக்கல் செய்தனர். இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் ஒ.பி.எஸ் தரப்பும் சசிகலா தரப்பும் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மேலும் ஆர்.கே.நகரில் பலமுனை போட்டிகள் நிலவுவதால் 3 தீவிர கண்காணிப்பு குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி விடுமுறை என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.