
உஷார்....பழங்களை பழுக்க வைக்க கால்ஷியம் கார்பைடு – சோதனையில் சிக்கிய 5 டன் பழங்கள்
சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் உள்ள பழங்களை கால்ஷியம் கார்பைடு மூலம் பழுக்கச் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 20 பேர் 3 குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 5 டன் பழங்களை பறிமுதல் செய்து, அதனை அழித்தனர்.
அதாவது சோதனையின் போது , 2 டன் மாம்பழங்கள், 2 டன் சப்போட்டா, 1 டன் பப்பாளி உள்ளிட்ட 5 டன் பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோயம்பேடு அங்காடி வளாகத்தின் பின்புறம் கொண்டுசென்று அந்தப் பழங்களை அழித்தனர்.
இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு உரித்தான உரிமம் ரத்து, வழக்குப் பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.