
காவிரி படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
2010 ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தது. அப்போது டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க விடுக்கப்பட்ட ஏலத்தில் GEECL நிறுவனம் ஏலத்தை கைப்பற்றியது.
2011 ஆம் ஆண்டு மீதேதேன் எடுப்பதற்கான லைசன்சை தமிழக அரசு வழங்கியது. மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமும் போட்டுகொண்டது.
அப்போதே பொதுமக்களும் விவசாயிகளும் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
2013 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மீத்தேன் திட்டத்திற்கு தடை விதித்தது.
பொதுமக்களிடையே எழுந்த எதிர்ப்பை அடுத்து 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் மீத்தேன் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் மீத்தேன் திட்டத்தில் திமுக கையெழுத்திட்டது உண்மைதான் எனவும், அதன் விளைவுகள் குறித்து தெரியாமல் கையெழுத்திட்டு விட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது காவிரி படுகையில் மீண்டும் மீத்தேன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது.