
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் வறட்சி நிவாரண நிதி யானை பசிக்கு சோளப் பொறி வழங்கி உள்ளதாக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை வறட்சி நிவாரணமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது.
தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்றும், மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய குழு கடந்த ஜனவரி 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழகத்தில் ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் மத்திய குழு தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 2096.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்தது.
மத்திய தேசிய குழுவின் துணை கமிட்டி தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1748.28 கோடி வழங்க பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியாக 1748.28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான வறட்சி நிவாரனத்தை முறையாக வழங்க கோரி டெல்லி ஜிந்தர்மந்தியில் தமிழக விவசாயிகள் அய்யாகண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் வறட்சி நிவாரண நிதி யானை பசிக்கு சோளப் பொறி வழங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.