தமிழக மீனவர்களுக்கு ஏப்ரல் 4 வரை சிறை - அடங்காத இலங்கை அரசு...

First Published Mar 23, 2017, 5:28 PM IST
Highlights
srilankan government extends the tamil fishermen release date


கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வரை சிறை தண்டனை விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 6 ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார்.

இதனால் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மீனவர்கள் பிரட்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனால் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை 10 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

அதேபோல், நேற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான 8 பேரும் காங்கேசன் துறை முகாமுக்கு கொண்டு செல்லபட்டுனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களுக்கு ஏப்ரல் 4 ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை யாழ்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

click me!