
மதுபான விலை அதிரடி உயர்வு.....தமிழக குடிமகன்கள் “சோ அப்செட்”.....
டாஸ்மாக் மதுபான விலை யை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார் .
கடனில் தத்தளிக்கும் தமிழக அரசின் வருவாய் ஆதாரத்தை பெருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு அண்மையில் உயர்த்தியது .
இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.78, டீசல் ரூ 1.76 ரூபாயும் விலை உயர்த்தப் பட்டது . இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால், அரசு மீது பல்வேறு ஏதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக உளவுத்துறை மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது .
இதனை தொடர்ந்து எந்த வழியில் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்று ஆலோசனை நடத்திய அரசு மதுபானங்களின் மூலம் வருவாயை அதிகப் படுத்த முடிவு செய்தது. இந்நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதக் கூட்டம் சட்டமன்றத்தில் நடைபெற்றது
அப்போது எழுந்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் .
5 சதவீத விலையுயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக அனைத்து மது வகைகளும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் தமிழக குடிமகன்கள் சற்று அப்செட் ஆகி உள்ளனர் .