பெண் தொழிலாளர்களிடம் சம்பள பாக்கி வைத்த மாநகராட்சி - ஆணையர் அலுவலகம் முற்றுகை...

First Published Oct 4, 2017, 6:36 PM IST
Highlights
In Madurai the hospital commissioners office has been protesting to protest against the lack of a two-month salaries for womens housing and spraying of medicines to spoil the dengue mosquito.


மதுரையில் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்தை வீடு, வீடாக சென்று தெளிக்கும் பெண்கள் தின கூலியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் சிறப்பு தூய்மைப் பணிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 32 மாவட்டங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிரந்தரமாக நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். 

டெங்கு பரவலைத் தடுக்க மருந்துகள் வாங்க மட்டும் சுகாதாரத்துறை ரூ.16 கோடி ஒதுக்கியுள்ளது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், மதுரையில் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்தை வீடு, வீடாக சென்று தெளிக்கும் பெண்கள் தின கூலியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

click me!