டிஜிபி அலுவலகத்துக்கு, உள்துறை செயலர் கடிதம்; வாக்கி - டாக்கி டெண்டர் குறித்து கேள்வி!

 
Published : Oct 04, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
டிஜிபி அலுவலகத்துக்கு, உள்துறை செயலர் கடிதம்; வாக்கி - டாக்கி டெண்டர் குறித்து கேள்வி!

சுருக்கம்

Home Secretary letter to DGP office

தமிழக காவல்துறைக்கு வாங்கப்பட்ட வாக்கி - டாக்கி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபிக்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக காவல் துறையில், வாக்கி - டாக்கி வாங்க டிஜிபி அலுவலக அதிகாரிகள் ரூ.88 கோடி மதிப்புள்ள டெண்டர் கோரினர்.

இந்த டெண்டரை பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்தது. இந்த நிலையில் டெண்டர் எடுத்த நிறுவனம் மீதும், டெண்டர் வழங்கிய அதிகாரிகள் மீதும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில், செயலர் நிரஞ்சன் மார்டி, வாக்கி - டாக்கி டெண்டர்குறித்து விளக்கம் கேட்டு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

டெண்டரில் ஒரே நிறுவனம் மட்டும் பங்கேற்றால் அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என அரசு விதி உள்ள நிலையில், விதி மீறி பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொலைத் தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு நிரஞ்சன் மார்டி, டிஜிபி அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

அரசு வேலை மட்டும் அல்ல… தனியார் வேலைக்கும் வழிகாட்டும் மையங்கள்! அரசு சொன்ன குட் நியூஸ்
அரசியல் எதிரிகளை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்யும் திமுக.. பெருமிதமாக மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்