வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு; மூலக்கூறு பற்றிய ஆய்வில் சாதனை...!

First Published Oct 4, 2017, 3:48 PM IST
Highlights
Nobel Prize for Chemistry


வேதியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்குஸ் டுபோசெட், ஜோச்சிம் பிரான்க், ரிச்சர்ட் ஹென்டர்சன் ஆகிய மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, அறிவியல், சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று முன்தினம் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

ஈர்ப்பு விசை அலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக ரெய்னர் வைஸ், பேரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஜாக்குஸ் டுபோசெட், ஜோச்சிம் பிரான்க், ரிச்சர்ட் ஹென்டர்சன் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரின் மூலக்கூறு குறித்த முப்பரிமாண கட்டமைப்பை கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

click me!