
சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில், வீடுகள் திடீரென இடிக்கப்பட்டதை தொடர்ந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை இணை கமிஷனர் சுதாகர், இங்கெல்லாம் வந்து பேட்டி எடுக்காதீங்க என மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில், வீடுகள் திடீரென இடிக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக, இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து வீடுகள் இடிக்கப்பட்டால், கடலில் குத்தித்து போராட்டம் நடத்துவோம் என மீனவ பெண்கள் கடலில் இறங்கினர்.
இதையடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட வடசென்னை இணை கமிஷனர் சுதாகர் அங்கு வந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை பேட்டி எடுக்காதீர்கள் என்றும், பேட்டி எடுத்தால், நடவடிக்கை எடுப்பேன் எனவும் மிரட்டும் தொணியில் இணை கமிஷனர் சுதாகர் பேசியதாக பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.