மக்களே உஷார்...! - 2 விசைத்தறி கூடங்களுக்கு ரூ. 60,000 அபராதம்...!

Asianet News Tamil  
Published : Oct 21, 2017, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
மக்களே உஷார்...! - 2 விசைத்தறி கூடங்களுக்கு ரூ. 60,000 அபராதம்...!

சுருக்கம்

In Kodapalli talukkattu area mosquito production of water pumps in the 2 looms for Rs. 60000 fine.

குமாரபாளையம் தட்டாங்குட்டை பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் தொட்டிகளில் நீர் தேக்கியிருப்பதாக 2 விசைத்தறி கூடங்களுக்கு ரூ. 60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்குவை பரப்பும் வகையில் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காதவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். 

திருவாரூர் அருகேயுள்ள அரசவனங்காடு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு லாரி டயரில் டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பதைப் பார்த்தார். இதனையடுத்து, நேற்று அந்த நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம் விதித்தார்.

அதைதொடர்ந்து குமாரபாளையம் தட்டாங்குட்டை பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் தொட்டிகளில் நீர் தேக்கியிருப்பதாக கைத்தறி கூடங்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. 

கைத்தறி கூடங்களை நேரில் ஆய்வு செய்த பின் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கொசு உற்பத்தியாகும் வகையில் தொட்டிகளில் நீர் தேக்கியிருப்பதாக 2 விசைத்தறி கூடங்களுக்கு ரூ. 60,000 அபராதம் விதித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

விவசாய நிலத்தில் தங்கப் புதையல்.. தோண்டத் தோண்ட வெளிவந்த 86 தங்க நாணயங்கள் மீட்பு!
மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!