"விஜயை அவர்கள் பக்கம் இழுக்க தான் இந்த உள்நோக்கமாம்"- சொல்கிறார் திருமாவளவன்...!

 
Published : Oct 21, 2017, 07:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
"விஜயை அவர்கள் பக்கம் இழுக்க தான் இந்த உள்நோக்கமாம்"- சொல்கிறார்  திருமாவளவன்...!

சுருக்கம்

thirumavalavan said about vijaus mersal film

மெர்சல் படம் வந்ததோ வந்தது ....கூடவே பிரச்சனையும்  வந்தது என்றே  கூறலாம்.

தீபாவளிக்கு ரசிகர்களுக்கு  விருந்தாக  அமைந்த  இந்த  திரைப்படம் தற்போது தான்  உண்மையான  மெர்சலாக  மாறி வருகிறது என்றே கூறலாம்.

காரணம் :

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள படத்தின் ஓரிரு காட்சிகள், பொதுமக்களிடம் தவறான வகையில் மெசேஜ் கொண்டு சேர்ப்பதாகக் கூறி, அதனை தணிக்கை செய்தவர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனவே, அதில் வரும் தவறான காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர் பாஜக.,வினர். ஆனால், அதனை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று கோருவதாகக் கருதி, அவ்வாறெல்லாம் ஒருமுறை செய்யப்பட்ட படத்துக்கு மறு தணிக்கை செய்ய இயலாது என்று கூறுகின்றனர் இன்னொரு தரப்பினர். 

இந்த நிலையில், மறு தணிக்கை என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், மறு தணிக்கை செய்வதை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. ஒரு படத்தை தணிக்கை செய்த பிறகு, அதில் இடம்பெறும் காட்சிகளை நீக்கச் சொல்வது தவறானது என்று கூறுகின்றனர், தயாரிப்பாளர்கள்! 

இந்த  தருணத்தில் படத்திலிருந்து இந்த காட்சிகள் நீக்கப்படுமா  அல்லது விஜய் வீட்டிற்கு  ரெய்டு போகுமா என்ற நிலை உருவாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.

இதனிடையே பா.ஜ.க விற்கு கடும் எதிர்ப்பை பல  அரசியல்  தலைவர்கள்  தெரிவித்து  வருகின்றனர். அந்த  வரிசையில், நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் தெரிவித்துள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு