
மெர்சல் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் தவறு என்று சொல்லவில்லை, எப்படி மருத்துவ பரிசோதனை குறித்து தவறாக திணிக்கலாம் என அரசு சாரா மருத்துவர்கள் சங்கம், மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது
அதில் மெர்சல் படத்தில்காட்சி படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் இலவச மருத்துவமனை பற்றியும், ஐந்து ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கும் முறையை பற்றியும் காண்பிக்கப்பட்டு உள்ளது.
சுருங்க சொல்ல வேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் எல்லாமே பொய்யாக உள்ளது என்றும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,முறையான சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் போலியாக செயல்படுவதாகவும் பல குற்றசாடுகளை இந்த படத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குனர் அட்லி மற்றும் விஜய் மீது பாய்ந்துள்ளது அரசு சாரா மருத்துவர்கள் சங்கம்.
இது குறித்து அரசு சாரா மருத்துவர் சங்கம் தெரிவிக்கும் போது, மருத்துவ பரிசோதனைகள் செய்வது பொய் என்ற பிம்பத்தை எப்படி ஏற்றுகொள்வது? அரைகுறையாக புரிந்துக் கொண்டு தவறான கருத்தை இந்த படத்தின் மூலமாக திணித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெர்சல் படத்திற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது அரசு சாரா மருத்துவர்கள் சங்கம்.