போலீஸ் ஜாக்கிரதை... - திநகரில் பணத்துக்காக கை நீட்டிய போலீஸ்காரர் பணியிடமாற்றம்...!

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
போலீஸ் ஜாக்கிரதை... - திநகரில் பணத்துக்காக கை நீட்டிய போலீஸ்காரர் பணியிடமாற்றம்...!

சுருக்கம்

In a complaint filed with jewelery shops in Pondipazar in Chennai a policeman has made a stir in the workplace.

சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் நகைக் கடைகளில் பணம் வாங்கிய புகாரில் போலீஸ்காரர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

காவல்நிலைய எழுத்தராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் உள்ள நகைக் கடைகளில் தொடர்ந்து பணம் வசூலித்து வருவதாக காவல் துணை ஆணையருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

இதையடுத்து காவல்நிலைய எழுத்தாளர் கார்த்திகேயனிடம் துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டார். 

விசாரணையில் கார்த்திகேயன் பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, கார்த்திகேயனை மவுண்ட் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து துணை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  
 

PREV
click me!

Recommended Stories

Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!
திரிஷா பற்றி அசிங்கமான பேச்சு... சட்டென வந்த கோபம் - திமுக நிர்வாகியை லெஃப்ட் ரைட் வாங்கிய கனிமொழி !