தீபாவளிக்கு வந்துவிட்டது ‘டெங்கு கொசு வெடி’ கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு...

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
தீபாவளிக்கு வந்துவிட்டது ‘டெங்கு கொசு வெடி’ கோவை இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு...

சுருக்கம்

Covai young man introduced Dengu Crackers

டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே மிரட்டி வரும் நிலையில், அந்த காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்களையும், டெங்குவையும் விரட்ட வேண்டும் என்று மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் டெங்கு கொசு வெடி இந்த தீபாவளிக்கு வந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த கலைஞர் ராஜா என்பவர் இந்த டெங்கு கொசு வெடியை தயாரித்துள்ளார். டெங்கு காய்ச்சலையும், அதனை பரப்பும் கொசுக்கள் குறித்து மக்களுக்கு இதன் மூலம் விழிப்புணர்வு ஊட்ட முடியும்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் போன்று உருவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வெடி, சற்று பெரிதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலைஞர் ராஜா கூறுகையில், “ டெங்கு காய்ச்சலின் தீவிரத்தையும், ஏ.டி.எஸ். கொசுக்களின் அபாயத்தையும் மக்களிடத்திலும், குழந்தைகளிடத்திலும் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இது சரியான நேரம் என்று எண்ணினேன். அதன் காரணமாக பட்டாசுகள் மூலம் கொசு போன்ற தோற்றத்தில் இந்த வெடியை உருவாக்கினேன்.

மேலும், டெங்கு என்பது ஒரு ‘பெரிய வெடி’(பாம்) என்று மக்களிடத்தில் தெரிவிக்க இந்த வெடி தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை என்பது, பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு மாசடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அமைச்சர் இருக்கையில் ஆதவ் அர்ஜூனாவை அமர வைத்து வாழ்த்திய முதலமைச்சர் விஜய்
Fuel Price Hike Protest: பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு - சென்னையில் சிபிஐ(எம்) போராட்டம்!