
தமிழகத்தில் 41 இடத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் இருந்து வந்தன. அதற்கு காரணம் பெரும்பாலும் ஓட்டுனர்கள் நெடுஞ்ச்லைகளில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே என்று போலீசார் தரப்பில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 500மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி அரசும் நெடுஞ்சாலைகளில் உள்ள 500 டாஸ்மாக்கை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.
அதன்படி டாஸ்மாக் அகற்றப்பட்டு, வேறு சில கிராமங்களில் வைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அங்காங்கே டாஸ்மாக் கடைகளை சூறையாடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த 41 இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடபட்டுள்ளதாகவும், விதிகளுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கபடுவதாவும் பதில் அளித்தது.
விதிகளுடன் மக்கள் உணர்வுகளையும் அறிந்து டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.