
சென்னை உட்பட பல மாவட்டங்களில் இன்று கடுமையான வெயில் அடிக்கிறது. குறிப்பாக சென்னையில் 107 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் அனல் காற்று வீசும் என்றும் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 10 மணியளவிலேயே பல இடங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருப்பதால், 12 மணியளவில் இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான நாளாக இன்றைய தினம் அமையலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று கூறியிருந்தார்.
அதே நேரத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.