துணைவேந்தர்கள் நியமிக்க கோரும் வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 
Published : May 18, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
துணைவேந்தர்கள் நியமிக்க கோரும் வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சுருக்கம்

HC notice to TN govt in vice chancellor case

பல்கலை கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க கோரிய வழக்கில் அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவை துணைவேந்தர்கள் இல்லாமல் பல மாதங்களாக இயங்கிவருகின்றன.

அண்ணா பல்கலை கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழாவே நடைபெறாமல் இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்களின் மேற்படிப்பு, வேலை உள்ளிட்டவைகளில் பல முடக்கங்கள் கானப்படுகின்றன.

2 மாதத்தில் பெரியார், பாரதிதாசன் பல்கலை கழகங்களின் துணைவேந்தர் பதவியும் காலியாக உள்ளது.

இந்நிலையில், பல்கலை கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு, பல்கலை கழக மானிய குழுவும் பதில் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 23 December 2025: தொகுதி பங்கீடு.. எடப்பாடி பழனிசாமியுடன் இன்று பாஜக பேச்சுவார்த்தை
தமிழ்நாடு என்ற பெயர் திமுகவிற்கு கசக்கிறதா..? இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் முறையா..? சீமான் கேள்வி