தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை, 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

IMD has warned of heavy rains in 10 districts of Tamil Nadu vel

தென்னிந்திய மாநிலங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒருசிலப் பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்டப் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷண்கிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Latest Videos

மேலும் சென்னையில் வாகனம் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் மூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், வெப்பநிலையானது அதிகபட்சமாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்சமாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

vuukle one pixel image
click me!