மாநிலங்களின் அச்சத்துக்கு முடிவு கட்டுங்க பிரதமரே! மோடிக்கு ஜெகன்மோகன் பரபரப்பு கடிதம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

delimitation issue! jagan mohan reddy letter to Pm modi tvk

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார்  உள்ள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: தொகுதிகள் மறுசீரமைப்பு! மக்களவை சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்! நவீன் பட்நாயக்!

Latest Videos

இந்த கூட்டத்திற்கு திமுக சார்பில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும்போது பல மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு, தங்கள் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1971 முதல் 2011 வரையிலான 40 ஆண்டு காலத்தில் நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு குறைந்துள்ளது. 

இன்றைய நிலையில் மாநிலங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தேசிய கொள்கை உருவாக்கம் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டில் தென் மாநிலங்களின் பங்கேற்பு கணிசமாகக் குறையும். தேசிய முன்னுரிமையாக இருந்த மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தென் மாநிலங்கள் காட்டிய நேர்மையின் விளைவாக இந்த பங்கு குறைந்துள்ளது.

இதையும் படிங்க: இது எண்ணிக்கை பற்றியது அல்ல! அதிகாரத்தை பற்றியது! முதல்வர் ஸ்டாலின் முழு பேச்சு இதோ!

அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசாரப்படி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எனவே, அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் விகிதாசார இடங்களின் அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அரசியலமைப்பை திருத்த வேண்டியது மிகவும் அவசியம். நாட்டின் அரசியல், சமூக நல்லிணக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்ட விவகாரம் என்பதால், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மாநிலங்களின் அச்சத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். 

vuukle one pixel image
click me!