தாலி கட்டிய மனைவியை விட்டுட்டு கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

By vinoth kumar  |  First Published Jul 20, 2024, 4:39 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலனியை சேர்ந்தர் மணிகண்டன் (32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 


கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவரை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலனியை சேர்ந்தர் மணிகண்டன் (32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி? சபதம் எடுத்த கேங்! உளவுத்துறை வார்னிங்! உச்சக்கட்ட பதற்றத்தில் தலைநகர்!

இந்த விவகாரம் நாளடைவில் மணிகண்டனின் வீட்டுக்கு தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. கள்ளக்காதலியை பிரிந்து இருக்க முடியாததால் அவருடன் வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கினர். இதனிடையே கணவரை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

பின்னர் சேலம் மாவட்டத்தில் தங்கி இருப்பதை அறிந்து வளையசெட்டியூருக்கு சிவரஞ்சனி வந்தார். அங்கு கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த மணிகண்டனை தன்னோடு வரும்படி மனைவி அழைத்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கண்டித்தார். அங்கிருந்து திடீரென வெளியேறிய மணிகண்டன் பூலாம்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலை கிடந்தார். 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! யார் கூப்பிட்டாலும் போக கூடாது! திருமாவளவன் நிர்வாகிகளுக்கு கண்டிஷன்..!

இதனையடுத்து அவரை  எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக மணிகண்டன் உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!