ரூ.30 கொடுத்தால் பிளாஸ்டி ஆதார்; ரூ.10 கொடுத்தால் காகித ஆதார்...

First Published Jan 14, 2017, 12:39 PM IST
Highlights

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் ஆதார் அட்டை பதிவு செய்து ஆதார் அட்டை வாங்காதவர்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் ஆதார் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

இந்த மையங்கள் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை செயல்படும். ஆதார் உதவி மையங்களில் ஆதார் எண்ணிற்குப் பதிவுகளைச் செய்து ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்காத பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்ற பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்து சில விநாடிகளில் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம்.

கிடைத்த ஆதார் எண்ணை கொண்டு அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல் ரேகை அல்லது கருவிழி பதிவு செய்து ரூ.30 செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெற்றுக் கொள்ளலாம். அல்லது ரூ.10 செலுத்தி காகிதத்தில் அச்சிட்ட ஆதார் அட்டை பெறலாம்.

ஆதார் அட்டைக்கு ஒருமுறை பதிவு செய்தவர்கள் மீண்டும் நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

click me!