அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அறையைக் குளிரூட்ட ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகளை வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் சிறிது நேரம் செயலிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஸ்ட்ராங் ரூம் என்ற அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்குப் பெட்டிகள் வைக்கபட்டு 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரே ஆண்டில் 10,000 ஃப்ரெஷர்களுக்கு வேலை! HCL நிறுவனம் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு
நீலகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சிகளின் முகவர்கள் கண்காணிப்பதற்காக அருகில் உள்ள அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சனிக்கிழமை மாலை திடீரென சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அவை வழக்கம் போல் செயல்பட தொடங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க அறையைக் குளிரூட்ட ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிராங் ரூமில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீலகிரியில் திமுக வேட்பாளராக ஆ.ராசாவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஏடிஎம் கார்டே தேவை இல்ல... UPI பேமெண்டுக்கு ஆதார், போன் நம்பர் மட்டும் போதும்!